Home இந்தியா குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார்..

குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார்..

by admin

இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியின்  ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுள்ளார்.

இந்திய ராணுவத்தின்  முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்சம் மக்கள் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தென்கா பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், ஆளுநர்கள் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட நிலையில தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More