196
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலை வென்று ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
செர்பியாவின் முதல்தர வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரருமான ரபேல் நடாலும் இறுதிப் போட்டியில் போட்டியிட்ட நிலையில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
அஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love