சீனாவுக்கான கனடா தூதுவர் ஜோன் மெக்கலனை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியிலிருந்து நீக்கி உள்ளார். ஹூவாய் நிறுவனத்தின் தலைமை அதிகாரியை அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தமை தொடர்பில சர்ச்சைக்குரிய கருத்தை மெக்கலன் தெரிவித்ததனை தொடர்ந்து அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
ஹூவாய் நிறுவன தலைமை அதிகாரியின் கைது விவகாரம் தவறானது என விமர்சித்த ஜோன் மெக்கலன் அடுத்த நாளே தான் பேசியது தவறென மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந்தநிலையில் அஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஜோன் மெக்கலனை பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் எனினும் அந்த அறிக்கையில் காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹூவாய் நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் கைதினை தொடர்ந்து சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது