Home இலங்கைமொஹமட் முஸம்மில் புலனாய்வுத் திணைக்கத்தில் முன்னிலையானார்…

மொஹமட் முஸம்மில் புலனாய்வுத் திணைக்கத்தில் முன்னிலையானார்…

by admin

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரின் கொலை சதித்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச வாக்குமூலம் வழங்கியிருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விமல் வீரவங்ச, அவரின் மனைவி சசி வீரவங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More