Home உலகம்காபுலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் தாலிபன்கள் தாக்குதல் – பேரப்பிள்ளைகள் உட்பட ஐவர் பலி

காபுலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் தாலிபன்கள் தாக்குதல் – பேரப்பிள்ளைகள் உட்பட ஐவர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ஆப்கானிஸ்தானின் காபுலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில்  தாலிபன் தீவிரவாதிகள்  மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை ஒன்றில் குறைந்தது  ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரான  மிர் வாலியின் வீட்டு வளாகத்தில்  மேற்கொள்ளப்பட்ட இந்தத்  தாக்குதலில் அவர் உயிர் தப்பித்துள்ள போதும் அவருடையை பேரப்பிள்ளைகளில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தாக்குதல் மேற்கொண்டவர்களை  பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதாக சம்பவ இடத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை மாலை மூன்று துப்பாக்கித்தாரிகள் தங்களுடைய தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர். அதில், குறைந்தது ஒரு தாக்குதல்தாரியாவது வீட்டிற்குள் வெடிப் பொருளை வெடிக்க வைத்திருக்கலாம் என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று  தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More