Home உலகம்நேபாள விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானி, மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் ….

நேபாள விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானி, மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் ….

by admin

நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என அந்த விபத்து குறித்த இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

71 பயணிகளுடன் பயணித்த அந்த விமானம் பங்களாதேசின் டாக்காவில் இருந்து புறப்பட்டு நேபாளத்தின் காத்மாண்ட்டில் தரையிறங்கும்போது தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்திருந்தனர்.

வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுடனான மோசமான தொடர்பே விமான விபத்துக்கு காரணம் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விமானி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், விமானக் குழுவினருடன் கோபமாக பேசியதாகவும், விமானியறையில் புகைப்பிடித்ததாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More