செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’வாண்டு’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றது. இந்தத் திரைப்படம் உண்மையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஷாஜி கூறியுள்ளார். செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரின் படம் என்பதால் இத் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை. வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தும் எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருப்பதாகவும் இயக்குனர் ஷாஜி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
அத்துடன் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறுவிறு திரைக்கதையுடன் பரபரப்பான படமாகவும் இருக்கும் என்றும் ஷாஜி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி வெளியாகவுள்ள இத் திரைப்படத்தை ரீது ஷிவானி இன்போடெயிண்மண்ட் வெளியிடுகிறது. படத்தில் சீனு, ஆல்வின், எஸ்.ஆர்.குணா, ஷிகா, சாய் தீனா, மகா காந்தி, மெட்ராஸ் ரமா, வின்னர் ராமச்சந்திரன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.