குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளது என கைலேசின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம் தெரிவித்துள்ளார்.
தற்போது நியூசிலாந்தின் அகதிகள் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் கைலேஸ் தனபாலச்ங்கம், நியூசிலாந்தில் குடியேறும் மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குபவர். அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அபத்தம் இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் இனக்குழுமங்களுக்கு பேரதிர்ச்சி எனவும் கைலேசின் குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.