Home இலங்கைபுத்தளத்தில், நான்கரை வயதுச் சிறுமி காணாமல் போனார்…

புத்தளத்தில், நான்கரை வயதுச் சிறுமி காணாமல் போனார்…

by admin

புத்தளம் – சாலியவௌ, நீலகம பிரதேசத்திலிருந்து நான்கரை வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி காணாமற்போன குறித்த சிறுமி, அன்றைய தினம் காலை 7 மணிக்கு வீட்டில் காண்ப்பட்டுள்ளதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் கலா ஓயாவும் அதனை அண்மித்து வில்பத்து தேசிய சரணாலயமும் அமைந்துள்ள நிலையில் சிறுமியை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினரும் காவல்துறை மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் கடற்படையினரினாலும் கலா ஓயாவில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More