Home இலங்கைமன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை(1) மாலை 3 மணியளவில் பாடசாலை முதல்வர் எம்.வை.மாஹீர் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே.பிறட்லி,அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயலாளரும்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன், வர்த்தக வானிப அமைச்சின் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்.என்.முஜீபுரகுமான்,மன்னார் நகர சபை உறுப்பினர்களான என்.எம்.நகுசீன் மற்றும் உவைசுல்ஹர்னி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது பாடசாலையின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, பரிசலிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றுதல்கள், பதக்கம் மற்றும் வெற்றிக் கேடையங்களும் விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More