இலங்கைக்கான வெளியுறவு கொள்கைகளை வலுப்படுத்தவும் சர்வதேச உறவுகளை பேணவும் மகிந்த ராஜபக்ஸவின் வெளியுறவு அலுவலகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை எவ்வாறு சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவது என்பது தொடர்பில் கற்கைகளும் ஆராய்ச்சிகளும் இங்கு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஸ சர்வதேச உறவுகள் நிலையம் எனப் பெயரிப்பட்டுள்ள இந்த நிலையத்தின் செயலாளராக ஜானக நிமலச்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் இறைமை மற்றும் சுயாதிபத்தியத்தியத்தை மனதில் கொண்டு பிராந்திய நாடுகளை பங்காளர்களாக மாற்றும் செயற்பாட்டை இந்த நிலையம் முன்னெடுக்கும் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த நிலையமானது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை ஆராய்ந்து, அதனை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடும் எனவும் நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.