199
தியாகி திருமலை நடராஜனின் நினைவு தினம் இன்றாகும். இவர் 1957ஆம் ஆண்டு இதுபோன்ற சுதந்திர தினத்தின்போது, இலங்கை தேசிய கொடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில், படுகொலை செய்யப்பட்டவர் ஆவார்.
இலங்கையில் சிங்களக் கொடியை தமிழ் மக்கள் நெடுங்காலமாக புறக்கணித்து வந்துள்ளனர். தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறை மற்றும் உரிமை மறுப்பு என்பவற்றால் இல்கை தேசியக் கொடி எதிர்ப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளானது.
இலங்கை தமிழரசுக் கட்சி கடந்த காலத்தில் தேசியக் கொடியை புறக்கணித்து வந்தது. அத்துடன் வடக்கு கிழக்கில் நடந்த தமிழர்களின் நிகழ்வுகளில் சிங்கக் கொடிக்குப் பதிலாக நந்திக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி கூறியது.
இதனையடுத்து வடக்கு கிழக்கில் நந்திக் கொடி ஏற்றப்பட்ட நிகழ்வுகளும் நிகழந்தன. இதேவேளை 1957இல் தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரபபட்டமைக்கு அன்றைய வருட சுதந்திர தினத்தில் எதிர்பபை வெளியிட தமிழரசுக் கட்சி வலியுறுத்தியது.
திருகோணமலையில் உயரப் பறந்த சிங்கக் கொடியை 22 வயதான இளைஞரான திருமலை நடராஜான் அறுப்பதற்காக ஏறியவேளையில் இலங்கை அரச படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டார். தேசியக் கொடியுடன் திருமலை நடராஜனும் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. திருமலை நடராஜன் உயிர் நீத்து இன்றுடன் 62 வருடங்கள் ஆகும்.
Spread the love