தகவல் தொடர்பு வசதிக்காக இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் -31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக இன்றையதினம் விண்ணில் ஏவப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள், இன்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட ஜிசாட்-31 செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகின்றது
Feb 5, 2019 @ 03:42
விசாட் இணைய இணைப்பு , டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் கைத்தொலைபேசி சேவைகளுக்காக ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது. தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந’;தியாவின் 40ஆவது செயற்கைக்கோளான ஜிசாட்-31ஐத் தயாரித்துள்ளது.
நாளை பிரெஞ்ச் கயானாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாகவும் 15 ஆண்டுக் கால சேவையை முன்னிறுத்தி இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ வெளியட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட இன்சாட் ஜிசாட் ரக செயற்கைக்கோள் வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள ஜிசாட்-31 செயற்கைக்கோள் 2,535 கிலோகிராம் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது