Home இலங்கைதமிழ்மக்களின் எதிர்காலத் தீர்வுக்காக எத்தகைய தரப்பினருடனும் பேசத் தயார்

தமிழ்மக்களின் எதிர்காலத் தீர்வுக்காக எத்தகைய தரப்பினருடனும் பேசத் தயார்

by admin


தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் தீர்வுகளுக்கும் பதில் வழங்க முடியாமல், மகிந்த தரப்பினரே கூட்டங்களைப் புறக்கணித்தார்களென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான தீர்வு வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில், அசமந்தப் போக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கடைப்பிடித்தது என, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும், தாங்கள் பங்குபற்றியதாகவும் தங்களின் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே, பேச்சுவார்த்தைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கியதாகவும் பழையதைப் பேசுவது காலவிரயம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்ஸ எந்தவேளையிலும் தங்களுடன் பேசமுடியுமெனவும் தமிழ்மக்களின் எதிர்காலத் தீர்வுக்காக, எத்தகைய தரப்பினருடனும் பேசத் தயாரெனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More