Home உலகம்திருச்சபைகளில் பாலியல் அடிமையாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர்…

திருச்சபைகளில் பாலியல் அடிமையாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர்…

by admin

போப் பிரான்சிஸ் பகிரங்க ஒப்புதல் வழங்கினார்..

திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமையாக நடத்தப்படுகின்றனர் என்பதனை போப் பிரான்சிஸ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் பிரச்னை இருக்கிறது , அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என போப் பிரான்சிஸ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் அதனை நிறுத்துவதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சில மதகுருக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் இந்த துஷ்பிரயோகத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதகுருக்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை தாம் அறிந்துள்ளதாக போப் பிரான்ஸ் ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More