Home உலகம்காணாமல் போயிருந்த சலாவின் சடலம் மீட்பு

காணாமல் போயிருந்த சலாவின் சடலம் மீட்பு

by admin


ஆர்ஜன்ரினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா பயணித்த விமானம் காணாமல்  போயிருந்த நிலையில் தற்போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரைஇ வேல்ஸ் நாட்டின் கார்டிப் கழக அணி அண்மையில் வாங்கியிருந்த கடந்த ஜனவரி 21ம்திகதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கார்டிப் சென்சு விட்டு தனியார் விமானம் ஒன்றில் பிரான்சுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சானல் தீவுகளுக்கு அருகே விமானத்துடன் சேர்ந்து காணாமல் போயிருந்தார்.

விமானத்தில் பயணம் செய்த சலா மற்றும் விமானி குறித்து தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் கடந்த ஞாயிறுக்கிழமை காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் நேற்று சடலத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இ அது எலிமியானோ சலா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More