Home உலகம்வெனிசூலா எல்லை மூட்டப்பட்டதனால் உதவி பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம்

வெனிசூலா எல்லை மூட்டப்பட்டதனால் உதவி பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம்

by admin


வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்துள்ள  ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ வெனிசூலாவின் எல்லை பகுதிகளை மூடிவிட்டதனால் உதவி பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்தமையினால் அரசியல் குழப்பம் நீடித்து வருகின்றது.

அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் அந்த நாடுகளுடன் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார்.

அந்தநிலையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசூலா மக்களுக்கு தேவையான உதவி பொருட்களை வழங்க முன்வந்துள்ள போதும் வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கும் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ வெனிசூலா எல்லை பகுதிகளை மூடியுள்ளார்.
இதனால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உதவி பொருட்களை ஏற்றி வந்த பாரவூர்திகள் எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இதனால் உதவி பொருட்கள் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வெனிசூலா மக்கள் ஏமாற்றம் அடைந்துள்;ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More