Home உலகம்கனடாவில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கனடாவில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை

by admin


கனடாவில் கடந்த 2017ம் ஆண்டு மசூதியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொன்ற இளைஞர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கனடாவின் கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு நுழைந்த இளைஞர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் பலத்த காயமடைந்திருந்தனர்.

இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய 29 வயதான அலெக்சாண்டர் பிசோனெட் என்னும் இளைஞரை கைது செய்த காவல்துறையினர் அவர்மீது வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் 40 ஆண்டுகள் வரை அவர் பரோல் பெற முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More