சுவாமி விபுலானந்தா அழகியில் கற்கை நிறுவகத்தின் கட்புல மற்றும் தொழில்நுட்பக் கலைத்துறை இறுதியாண்டு மாணவர்களின் காண்பியக்கலை வெளிப்பாடுகள் நிறுவகத்தில் முதன் முதலாக காட்சிப்படுத்தல் நடைபெறுகின்றன.
கட்புல மற்றும் தொழில்நுட்பக்கலைத்துறையின் புதிய பாடத்திட்டத்திற்கும் கற்பித்தல் முறைகளுக்கூடான ஒழுங்குபடுத்தலால் வழிகாட்டல் ஆலோசகரான மரியா லுக்மனின் மேற்பார்வையுடன் விரிவுரையாளர் பா. புஸ்பகாந்தனின் எடுத்தாளுகையின் கீழ், ஏனைய விரிவுரையாளர்களின் உதவியுடன் இக் காண்பியக்கலைக் காட்சிப்படுத்தலானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு பரிசோதனைகளின் விளைவால் மாணவர்களினால் உருவாக்கப்பட்ட வரைதல், பல்லூடகக்கலை, ஸ்தாபனக்கலை, சிற்பம் மற்றும் டிஜிடல் கலை போன்ற வௌ;வேறு காண்பிய வெளிப்பாட்டு முறைமைகளுக்கூடான வெளிப்பாடுகளே ,ங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.
இவை உள்ளுர் கலை மரபுகள், கைவினைப் பண்புகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் போன்ற உள்ளுர் அறிவுசார்ந்த விடயங்களும் மற்றும் மாணவர்களினது சுயம் சாரந்த விசாரணைகளுக்கூடான விடயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.
இக் காட்சிப்படுத்தலானது எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கு முன்ம hதிரியாக அமைவதுடன், எமது மாணவர்களினையும் சமூகத்தினையும் கலைப்படைப்பினூடாக ஒன்றிணைப்பதாகவும் எமது சமூகத்திற்கு சமகால காண்பியக்கலை தொடர்பான அறிவினை வழங்குவதாகவும் அமையப்பெறுகின்றன.
மாணவர்கள் தொடர்ந்து கலைவேலைப்பாடுகளை மேற்கொள்வதற்கும் தன்னை கலைஞனாக முதன்னிலைப்படுத்துவதற்கும் ஏனைய கலைச்சமூகத்திற்குள் தங்களது கலைவெளிப்பாடுகளை காட்சிப்படுத்துவதற்கும் ஒரு அடிப்படையினை வழங்குவதாக இக் காட்சிப்படுத்தல் அமையப்பெறுகின்றது.