Home இலங்கைநாவற்குழியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

நாவற்குழியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சாவகச்சேரி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி காவல் நிலைய உப காவல்துறைப் பரிசோதகர் இ.சேந்தன் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதோடு வளர்க்கப்பட்ட கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கைதினைத் தொடர்ந்து நாவற்குழிப்பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகின்றதா என்ற கோணத்தில் விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More