Home இந்தியா மணிப்பூரில் போராட்டம் தீவிரமடைந்தது – 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது…

மணிப்பூரில் போராட்டம் தீவிரமடைந்தது – 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது…

by admin

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், இரண்டு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் அசாம், மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூர் மாநிலத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு சமூக அமைப்புகள் தனித்தனி குழுக்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டும் அவர்கள் கலைந்து செல்லாதமையினால் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் 6 பெண்கள் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு போராட்டம் தீவிரமடைந்திருப்பதால் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாளை புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More