Home இந்தியாஆறுமுகசாமி விசாரணை ஆணையகத்தின், கால அவகாசத்தை நீடிக்கக் கோரிக்கை…

ஆறுமுகசாமி விசாரணை ஆணையகத்தின், கால அவகாசத்தை நீடிக்கக் கோரிக்கை…

by admin

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையகத்தின் கால அவகாசம் எதிர்வரும் வரும் 24ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசிடம் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த ஆணையம் அமைக்கப்பட்டுக் கடந்த ஒராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆணையத்தின் கால அவகாசம் கடந்த ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகிதியுடன் நிறைவடைந்த நிலையில், 2019 பெப்ரவரி 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணைக்குழுவில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், சசிகலா உறவினர்கள் மற்றும் அப்போலோ மருத்துவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் முன்னிலையாகி விளக்கம் அளித்துள்ளனர். விசாரணை ஏறக்குறைய நிறைவடையவுள்ள தருவாயில் இன்னும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் மட்டும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளனர். இந்த நிலையில் ஆணையத்தின் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் நேற் கடிதம் எழுதியுள்ளது. விசாரணை இன்னும் முடிவடையாததால் ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 10 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More