Home பிரதான செய்திகள்உலக கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என மொயின்கான் நம்பிக்கை

உலக கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என மொயின்கான் நம்பிக்கை

by admin


உலக கிண்ணப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என்று முன்னாள் அணித்தலைவர் மொயின்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நோடகாணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக கிண்ணப் கிரிக்கெட் போட்டியில் தாங்கள் இதுவரை இந்திய அணியை வீழ்த்தியது இல்லை எனத் தெரிவித்த அவர் தற்போதைய பாகிஸ்தான் அணி எதிர்வரும் உலக கிண்ணப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும். எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அளவுக்கு தங்கள் அணி வீரர்களிடம் திறமையும், நம்பிக்கையும் இருக்கிறது எனத் தெரிவித்த அவர் இங்கிலாந்தில் 2 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் தங்கள் அணியினர் இந்திய அணியை வீழ்த்தியிருந்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஜூன் மாதம் இருக்கும் சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதுடன் தங்கள் அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக இருப்பதனாலும்தான் இந்திய அணியை வீழ்த்தி தமது அணி வரலாறு படைக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் இதுவரை 6 முறை போட்டியிட்டதில் பாகிஸ்தான் இதில் ஒரு முறை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More