இந்திய அளவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நஸ்டத்தில் இயங்கி வருவதனால் அநநிறுவனம் மூடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனத்தை மூடுவது உள்ளிட்ட அனைத்து ஆய்வுகளையும் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அரசாங்கம் சில உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் முன்னணி அதிகாரிகள் சிலர் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை சந்தித்து நிறுவனத்தின் நிதிநிலை, இழப்புகள், ஜியோவின் வருகை நிறுவனத்தை எப்படிப் பாதித்தது, உளிளட்டமை குறித்து கலந்துரையாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிறுவனத்தை மூடும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிகாரிகள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் மூலோபய முதலீடுகளை திரும்பப் பெறுதல் மற்றும் நிறுவனத்தைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது கைத்தொலைபேசி , லாண்ட் லைன் மற்றும் பிரோட் பேண்ட் சேவைகளை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.