திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை 15ம் முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால் திருகோணமலை மாவட்டத்தை சூழவுள்ள கரையோரங்களில் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கரையோர பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் புவிசரிதவியல், சுரங்கப் பணியகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது