Home இலங்கைமன்னார் மனித புதைகுழியில் சந்தேகத்திற்கிடமான சிறுவரது எலும்புக்கூடு :

மன்னார் மனித புதைகுழியில் சந்தேகத்திற்கிடமான சிறுவரது எலும்புக்கூடு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்று வியாழக்கிழமை காலை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.

குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடு அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்ற நிலையில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமான சிறுவரது எலும்புக்கூடு ஒன்று மீட்;கப்பட்டுள்ளது.

குறித்த மனித எலும்புக்கூட்டின் அருகில் உலோக பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.

தற்போது குறித்த சிறு மனித எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த எலும்புக்கூடு 18 வயதுக்குற்பட்ட சிறுவருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை இன்றைய தினம் குறித்த புதைகுழி தொடர்பான ஆய்வு முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தற்போதுவரை வெளிவராதநிலையில் இன்று மாலைக்குள் அல்லது நாளை முடிவுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதுவரை குறித்த மனித புதைகுழியில் 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 307 மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More