Home உலகம்ஸ்லோவேனியாவில் சாண்ட்விச் திருடிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிவிலகல்

ஸ்லோவேனியாவில் சாண்ட்விச் திருடிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிவிலகல்

by admin


ஸ்லோவேனியாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினரான 54 வயதான தர்ஜ் கிரஜ்க்சிச் (Darij Krajcic) என்பவர் பதவி விலகியுள்ளார்.

ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்ற போது அங்கிருந்த ஊழியர்கள் தன்னை கண்டுகொள்ளாததால் எரிச்சலுற்ற தான் அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் வகையில் அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்ஜ் கிரஜ்க்சிச் தெரிவித்துள்ளார்.

தான் குறைந்தது மூன்று நிமிடங்களாவது பணம் செலுத்துவதற்காக பொறுத்திருந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More