பிரியங்கா காந்தி கணவர் ரொபர்ட் வதேராவின் 4.62 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மேற்கொண்டதாக , காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், கிழக்கு உபி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ரொபர்ட் வதேரா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் ரொபர்ட் வதேரா விசாரணைக்காக அமுலாக்கத் துறையில் முன்னிலையாகிவருகின்ற நிலையில் அவர் மீது, ராஜஸ்தானில்; குறைவான விலையில் நிலங்களை வாங்கி அவற்றினை போலியான ஆவணங்கள் மூலம் அதிக விலைக்கு விற்றதாகவும் அமுலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பான வழக்கில் வதேராவும், அவரது தாயும் கடந்த செவ்வாயக்கிழமை, ஜெய்ப்பூரில் உள்ள அமுலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னிலையாகியிருந்தனர். இந்த நிலையில் நேற்றையதினம் வதேராவுக்கு சொந்தமான, 4.62 கோடி ரூபா சொத்துக்கரைள அமுலாக்கத்துஐற முடக்கியுள்ளது.
வதேரா மீதான விசாரணை ஓயாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் எனவும் ஆனால் தான் தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என பிரியங்கா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.