குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு கிழக்கு தழுவிய வகையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐநாவுக்கு வழங்க கையெழுத்துப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று முல்லைத்தீவிலும் இந்த கையெழுத்துப் சேகரிக்கும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி முல்லைத்தீவிவில் இன்று ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராடடத்தை நடத்திவருகின்றனர்
இந்நிலையில் வடக்கு கிழக்கு தழுவிய வகையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐநாவுக்கு வழங்க கையெழுத்துப்போராட்டத்தை இன்று அவர்கள் ஆரம்பித்துள்ளனர்
தொடங்க இருக்கும் 40 வது ஜெனிவா அமர்வில் தமக்கான நீதிகோரி தமிழ் உறவுகளிடம் ஒரு லட்சம் கையொப்பம் இடப்பட்ட மகஜரை சமர்ப்பித்து தமக்கான நீதிவேணடும் நோக்கத்திற்காக கையொப்பபோராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் எனவும் அம்பாறையில் தொடங்கி யாழ்ப்பாணம் வரைக்கும் தமது கையொப்பபோராட்டம் தொடருமெனவும் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இணைப்பாளர் திருமதி மரியசுரேஷ் ஈஷ்வரி தெரிவித்துள்ளார்