Home இந்தியா காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களது பாதுகாப்பு ரத்து

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களது பாதுகாப்பு ரத்து

by admin

 
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட காவல்துறைப் பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியிருந்தார்.

இதையடுத்து, காஷ்மீர் ஆளுனர் அம்மாநில உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள், வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப்பற்றி கருதாமல் கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு ஆளுனர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More