தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான யோசனையொன்றினை அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அந்த யோசனையை தாம் தோற்கடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் ஒரு வேட்பாளரையே, ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கவுள்ளதெனவும் எதிர்வு கூறியுள்ளது.
அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக இதனைத் தெரிவித்துள்ளர்h.
அதேநேரம் ஐ.தே.க முன்வைக்கும் நாட்டுக்கு நன்மை பயக்கும் யோசனைகளை தம்மால் ஆதரிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், நாட்டை நாசம் செய்யும் யோசனைகள தோற்கடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா வெளிப்படுத்தியமைக்காக, தாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமெனத் தெரிவித்த அவர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கவுள்ள மாபெரும் கூட்டணியிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவாரெனவும் குறிப்பிட்டுள்ளார்.