பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை இந்த வருட மத்தியில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எ-320 மற்றும் எ-321 அளவிலான விமானங்கள் தரையிறங்ககூடிய வகையில் 3500 மீற்றர் ஓடு பாதை ஒன்று அமைக்கபடவுள்ளதாகவும் விமான நிலையத்தினை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைக்காக 30 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் சென்ற போது இந்த நவீனமய பணிகள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. .
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் விமான படை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த நவீனமய நடவடிக்கையுடன் பலாலியில் இருந்து 7200 கிலோ மீற்றர் தூரத்துக்குள் நேரடி விமான சேவைக்கான வசதியும் செய்யப்படவுள்ளது. இந்தியா, அவுஸ்திரேலியா, சீனா, யப்பான், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கு ஊடாக விமான சேவைகளை மேற்கொள்ள முடியும் எனவும் இதன் ஊடாக வடக்கு மக்களுக்கு பல வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன் சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி ஏற்புடும் எனவும் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்துள்ளார்.