விசேட அபிவிருத்தி நியமச் சட்டத்தினால் மாகாணசபைகளுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாகாண முதலமைச்சர்களுடன் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த சட்டத்தின் ஊடாக மாகாணசபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பெற்றுக்கொள்வதல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர் தேசிய அபிவிருத்திக்கு மாகாணசபைகளின் செயற்பாட்டு ஆதரவினை திரட்டும் நோக்கில் இந்த சட்டம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள் தொடர்பிலான எந்தவொரு துறைக்கும் தலையீடுகள் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
இந்தச் சோழியன் குடுமி என்றுதான் சும்மா ஆடியது? விசேட அபிவிருத்தி நியமச் சட்டத்தினால் மாகாணசபைகளுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது, என்று கூறும் இந்தக் குள்ள நரிப் பிரதமர், இன்றைக்குத்தான் உண்மை பேசினார்?