இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தொலைக்காட்சி ; நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்ததனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருந்தநிலையில் இருவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு என விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என நிர்வாகக்குழு சார்பில் உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரி
யத்தின் விசாரணை அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது