Home இலங்கைகாலி ரத்கமவில் கடத்தப்பட்டு எரிக்கப்பட்ட, இரு வர்த்தகர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன…

காலி ரத்கமவில் கடத்தப்பட்டு எரிக்கப்பட்ட, இரு வர்த்தகர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன…

by admin


காலி ரத்கம பகுதியில் கடத்தப்பட்டு தீ வைத்துக் கொலை செய்யப்பட்ட இரு வர்த்தகர்களின் உடல் எச்சங்கள்  வலஸ்முல்ல- மெதகொடவில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வான் ஒன்றில் வந்தவர்களினால் ரத்கம, உதாகம பிரதேசத்தை சேர்ந்த  31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகிய   இருவரும் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட இருவரும் கொலைசெய்யபட்ட நிலையில் அவர்களின் எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை இந்தக் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் காவற்துறைப் பரிசோதகர் கபில நிசாந்த மற்றும் உப காவற்துறை  பரிசோதகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்த்தக்து.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More