163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகர் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். அலப்போவிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்ட கிளர்ச்சியாளர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். அலப்போவின் தென்மேற்கில் அமைந்துள்ள al-Hamdaniya மாவட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டை பதவியிலிருந்து கவிழ்க்கும் நோக்கில் போராட்டம் நடத்தி வந்த கிளர்ச்சியாளர்களை சிரிய மற்றும் ரஸ்ய படையினர் இணைந்து தாக்குதல் நடத்தி அலப்போவிலிருந்து வெளியேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love