அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில், 84 ஓட்ட வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்றையதினம் டேராடூனில் நடைபெற்றது
நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்திருந்தது.
இதையடுத்து, 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 84 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.