277
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஹீச்சிராபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றிலிருந்து வெடிபொருள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் வெடிபொருள் இருப்பதை முள்ளியவளை காவல்துறையினருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் குறித்த வெடிபொருளை பார்வையிட்டதுடன் இன்று செவ்வாயக்கிழமை நீதிமன்றில் அனுமதி பெற்று அதனை அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடிபொருட்கள் அகற்றிய பகுதியாக உறுதிப்படுத்தப்பட்டு மக்களை மீள்குடியேற்றிய பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love