Home இந்தியாபோர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகள், அறிவித்துள்ளன…..

போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகள், அறிவித்துள்ளன…..

by admin

தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானத்தை தாம்  சுட்டு வீழ்த்தியதாக இந்திய ராணுவம் கூறுகிறது தமது பகுதிக்குள் நுழைந்த இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை  விரட்டியதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். நவ்ஷேரா செக்டாரில் நுழைந்த ஒரு பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. அந்த விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த விமானம் தரையை நோக்கி வந்தபோது, அதில் இருந்த விமான ஓட்டி  பாராசூட் மூலம் குதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் என்ன ஆனார் என்பது  கிறித்த தகவல் வெளியாகவில்லை.

இதேவேளை  பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானப்படையின் 2 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தின் பெச்சாளர்  ஆசிப் கபூர்  தெரிவித்துள்ளார். இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி  சென்று  தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More