இந்தியாவின் போர் விமானங்கள் தமது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தமை காரணமாக அவற்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. மேலும் 2 இந்திய விமானிகளை கைது செய்துள்ளதாகவும் அறிவித்தது. அத்துடன் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனிடம் அந்நாட்டு இராணுவ அதிகாாிகள் விசாரணை செய்கின்ற காணொளி ஒன்றினை பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கைகள் பின்புற கட்டப்பட்டும், முகத்தில் காயங்களுடன் அபிநந்தன் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. குறித்த காணாளி சிறிது நேரத்தின் பின்னர் அமைச்சரின் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. எனினும் அந்த காணொளி பல்வேறு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதுவரை நேரில் அழைத்து தமது எதிர்ப்பை இந்தியா தொிவித்துள்ளதாக கூறுகின்றது. பாகிஸ்தான் இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க வந்ததை கடுமையாக கண்டித்துள்ளதாகசுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் கைது செய்யப்பட்ட இந்திய வீரரை கொடூரமாக காட்டியதற்கும் கடும் ஆட்சபனை இந்திய அரசு தொிவித்தது. அத்துடன் அவரை பாதுகாப்பாக நாடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.