Home இலங்கைதிருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பில் இருவர் கைது…

திருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பில் இருவர் கைது…

by admin

யாழ்ப்பாணம் மடத்தடியில் கடந்த வாரம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மடத்தடியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டில் யாருமில்லாத பகல் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மூன்று பவுண் தங்க நகை மற்றும் பணம் என்பவற்றை திருடப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய யாழ். மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஜெரோசன் தலமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, நாவற்குழியை சேர்ந்த 22,24. வயதுடைய இரண்டு சந்தேகநபர்களை இன்று கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ். காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தங்கநகையும் மீட்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More