Home இலங்கைகாணிகளை விடுவிக்கக் கோரி கொழும்பை நோக்கிய போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி கொழும்பை நோக்கிய போராட்டம்!

by admin

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் கூடிய கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடைந்தது. அத்துடன் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தின் பின்னர் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

கேப்பாப்பிலவு மக்களுடன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து நடத்தும் “வடக்கு பகுதிகளில் இன்று வரை படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்போம் என்னும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பரந்தன் ஊடாக கிளிநொச்சியை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் புறப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பாணத்தை இன்று வந்தடைந்தது. பூநகரி ஊடாக மன்னார், வவுனியா, நீர்கொழும்பு, கொழும்பு வரை ஊர்வலம் இடம்பெறும். இதேவேளை எதிர்வரும் இரண்டாம் திகதியன்று கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More