எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற பாரிய புகையிரத விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று மதியம் டீசலில் இயங்கும் பயணிகள் புகையிரதம் ஒன்று புகையிரத நிலையத்தை நெருங்கியபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் சென்று தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது கடுமையாக மோதியதில் அதன் டீசல் கொள்கலன் வெடித்து தீப்பிடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏற்பட்ட தீ, புகையிரத நிலையத்தின் நடைமேடைகளிலும், அருகில் உள்ள கட்டிடங்களிலும் பரவியதினால் 25பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.