நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, தனது இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ளதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. புஹாரி, 56 சதவீதமான வாக்குகளையும் அவரது பிரதான போட்டியாளரான வர்த்தகரும் முன்னாள் உப ஜனாதிபதியான மக்கள் ஜனநாயக் கட்சியின் அதிகூ அபுபக்கர் 41 சதவீதமான வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபது புஹாரி வென்றதாக அறிவிக்கப்பட்ட முடிவை நிராகரித்த அதிகூ அபுபக்கர், நீதிமன்றத்தில் இ வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி புஹாரி, புதிய நிர்வாகமானது, பாதுகாப்பு, பொருளாதாரத்தை மீளக்கட்டமைத்தல், மோசடிக்கெதிராக போராடுதலில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வார இறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படும் உத்தியோகபூர்வ முடிவுகளுக்காக காத்திருக்கிருமாறு, மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகம், ஆபிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் அனைத்துக் கட்சியினரையும் கோரியுள்ளனர்.