முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மார்ச் 15ம் திகதி வரை ஒத்திவைத்துள்ள கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அன்றைய தினம் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தநிலையில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள விதம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்ததனையடுத்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது