Home இலங்கையாழ் வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என படைத்தரப்பு அறிவிப்பு…

யாழ் வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என படைத்தரப்பு அறிவிப்பு…

by admin

யாழ்ப்பாணம், வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 30 ஏக்கர் காணி மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி ஒன்றும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்டவுள்ளதாக இலங்கைப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

மயிலிட்டித்துறை வடக்கு, மயிலிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் காணிகளும், பலாலி கிழக்கில் முதன்மை வீதி ஒன்றும் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் எஸ்.சிவசிறியிடம் நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு இராணுவத்தினர் காணி விடுவிப்புக்கான பத்திரத்தை ஒப்படைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காணிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில் அந்தப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More