குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கும் இடையிலான மற்றுமொரு தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஆபத்துக்களை எதிர்நோக்கிய ஊடகவியலாளர்கள் பட்டியல் குறித்து இருவருக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த உரையாடலில் கைவிரல் அடையாளங்களின் ஊடாக இந்த கடிதம் அனுப்பி வைத்தவர்கள் யார் என்பதனை அடையாளம் காண முடியும் என லசந்த, மஹிந்தவிற்கு ஆலோசனை கூறியிருக்கின்றார்.
இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களுக்கு இந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக மஹிந்த கூறியிருந்தார்.