Home இலங்கைசுரக்ஷா காப்புறுதி திட்டத்தை ரத்துச் செய்க – MY3 – முடியாது – அகில்….

சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை ரத்துச் செய்க – MY3 – முடியாது – அகில்….

by admin

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்றையதினம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.  மேலும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தினை உள்நாட்டினருக்கு வழங்காமல் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதன் நோக்கம் என்ன எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சரியான கேள்விமனு கோரியே இந்த காப்புறுதி திட்டம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அது அமுலுக்கும் வந்துள்ளதனால் அதனை ரத்துச் செய்வது கடினம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்தநிலையில் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தினை ரத்துச் செய்வது தொடர்பான முக்கியமான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது எனவும் இதன்போது இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More