168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை சென்றுள்ள அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் அலைனா பி டெப்லிட்ஸ் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.
அதன்போது இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டார்.
குறிப்பாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு உள்ள சவால்கள் மற்றும் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love