மாவோயிஸ்ட்அமைப்பின் முக்கிய தலைவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் 2 மாவோயிஸ்டுகள் தங்கியிருப்பதனையறிந்த அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்ற நிலையில் இருதரப்புக்குமிடையில் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவரான 40 வயதாக ஜலீல் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுட்டுக்கொல்லப்பட்ட ஜலீல், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்ததும், நாடுகாணி தளத்தின் கபனீதளம் பிரிவின் நிர்வாகியாக இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று கோழிக்கோடு அரச மருத்துவமனையில் ஜலீலின்; உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதனையடுத்து அப்பகுதயில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது